என் அப்பா 7 வருசமா வேறு ஒருத்தர் மனைவியுடன் குடும்பம் நடத்துகிறார்! கண்ட கண்ட போட்டோக்களை அனுப்புவார்! சுபாஷ் பண்ணையாரின் மகள் பகீர்!

பெற்ற தந்தையே தன்னை கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் மகள் வெளியிட்ட வீடியோவானது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூலக்கரை எனுமிடத்தில் சிவசுப்பிரமணியம் என்கிற சுபாஷ் பண்ணையார் வசித்து வருகிறார். இவர் அகில இந்திய நாடார் சங்கத்தின் தலைவராகவும், பனங்காட்டு படை கட்சியின் மாநில அமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்‌. இவருடைய மனைவியின் பெயர் ஜெயலிங்க தங்கம்‌. தன்னுடைய பிள்ளைகளுடன் ஜெயலிங்க தங்கம் மூலக்கரையில் வசித்து வருகிறார். தம்பதியினரின் மூத்த மகளின் பெயர் காவியா. 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் காவியா வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "நான் சுபாஷ் பண்ணையாரின் மகள். என் பெயர் காவியா. கடந்த 7 ஆண்டுகளாக என்னுடைய தந்தை மூலக்கரை பகுதியை சேர்ந்தவர் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். முகம் தெரியாத பெண்களிடமிருந்து பல்வேறுவிதமான அழைப்புகள் எங்களுக்கு வந்து கொண்டிருந்தன. இதனை நாங்கள் எங்கள் தந்தையிடம் முறையிட்டோம். முறையிட்டதற்காக எங்களை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். 

எங்களை கொலை செய்து அவருடைய எதிரிகள் மீது பழி போட திட்டமிட்டு வருகிறார். இதனைப் புரிந்துகொண்ட காவல்துறையினர் எங்களை பாதுகாக்க வேண்டும்" என்று காலியான வீடியோவில் பேசியிருந்தார்.

உடனடியாக தூத்துக்குடி காவல்துறையினர் கொலை மிரட்டல் விடுத்ததற்காக சுபாஷ் பண்ணையார் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோவானது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.