கால்ல வேணும்னாலும் விழுறோம் சார்..! நான்கு போலீசும்..! கண்ணீர் விட்டு கதறிய காதல் ஜோடியும்! விழுப்புரம் பரபரப்பு!

பெற்றோர் எதிர்ப்பை மீறி பெண்ணொருவர் வேறு சமூக இளைஞரை திருமணம் செய்து கொண்டதால் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் வி.அகரம் காலனி என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு விமல் என்பவர் வசித்து வந்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன சீரகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கிருத்திகா. இவ்விருவரும் புதுச்சேரியில் உள்ள கரியமாணிக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வந்தனர்.

இருவரும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர். இரு குடும்பத்தினரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் திருமணத்திற்கு ஒப்பு கொள்ளவில்லை. இருந்தாலும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூரில் பதிவு திருமணத்தை இருவரும் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் விமலின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

தங்கள் மகளை காதலித்து கடத்தி சென்றதாக, கிருத்திகாவின் பெற்றோர் ஆட்டையாம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரித்த காவல்துறையினருக்கு கிருத்திகா விழுப்புரம் வி.அகரம் காலனியிலிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக கிருத்திகாவின் உறவினர்களுடன் காவல்துறையினர் அங்கு சென்று காதல் ஜோடியை வாகனத்தில் ஏற்றி சென்று கொண்டிருந்தனர்.

இதனை அறிந்த விமலின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் காவல்துறையினரின் வாகனத்தை மறித்து தாக்கியுள்ளனர். காவல்துறையினர் வேறுவழியின்றி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அங்கு காவல் கண்காணிப்பாளராக சரவணகுமார் இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

விமல் மற்றும் கிருத்திகா மேஜர் என்பதால் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் செய்து கொள்ளலாம் என்று சரவண குமார் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய விருப்பத்தை கேட்டே விமல் தன்னை திருமணம் செய்தார் என்று கிருத்திகா கைப்பட எழுதி கொடுத்ததால் கடத்தல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னர் காதல் ஜோடி விமலின் பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டனர். வாழ்வின் இறுதி கட்டத்தை அடைந்து விட்டோம் என்று நினைத்து காதல்ஜோடி பயந்ததாக சரவணகுமாரிடம் கூறியுள்ளனர். மேலும் சேர்த்து வைத்ததற்காக நன்றியும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.