பாசப்போராட்டம் நடத்திய தந்தை! காதலனுடன் சேர்ந்து பெற்ற மகள் அரங்கேற்றிய கொடூர கொலை! கேட்போரை உலுக்கும் சம்பவம்!

பாசமாக வளர்த்த மகளை கணவனுடன் சேர்த்து தந்தையே கொலை செய்திருக்கும் சம்பவமானது கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் பத்தனம் திட்டா என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் சஜீவ். இவர் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கேரளாவில் வசித்து வருகின்றனர்.

ஒரே ஒரு மகள் என்பதால் சஜீவ் அவருக்கு மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டார். மகள் கேட்ட பொருளையெஎல்லாம் வெளிநாட்டிலிருந்து சஜீவ் அனுப்பியுள்ளார். தன் மகளின் மீது மிகுந்த பாசத்தை சஜீவ் பொழிந்துள்ளார்.

அவருடைய மகள் கல்லூரிக்கு தனியார் பேருந்தில் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் பேருந்து ஓட்டுநருக்கும், இவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இந்த காதலை பெண்ணின் தாய் கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் அதனை கேட்காமல் அந்த மாணவி தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் இந்த செய்தியானது சஜீவுக்கு தெரியவந்துள்ளது. அவர் தன் மகளிடம் அன்பாக கூறியும் அதனை அவர் ஏற்கவில்லை. வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தன் காதலனுடன் தலைமறைவாகிவிட்டார். 

சஜீவ் தன் மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரளித்தார். அவர்கள் இருவரையும் தேடி கண்டுபிடித்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் தாங்கள் இருவரும் மேஜர் என்றும் திருமணம் செய்து கொண்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனைக்கேட்ட சஜீவ் மிகவும் மனமுடைந்து உள்ளார். பலமுறை தன் மகளின் இருப்பிடத்திற்கு சென்று அவர்களை அச்சுறுத்தி வந்துள்ளார்.

திடீரென்று சஜீவ் வீட்டில் தனிமையில் இருப்பதை அறிந்த அவருடைய மகள் தன் கணவன் மற்றும் அவருடைய நண்பருடன் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தினால் சஜீவை கடுமையாக தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சஜீவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

கொலையில் சம்பந்தப்பட்ட 3 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.