நள்ளிரவில் தாயை பரலோகம் அனுப்பிவிட்டு பகலில் காதலனுடன் தேனிலவு..! அந்தமானில் சிக்கிய இளம் பெண் பொறியாளர்..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

கர்நாடகாவில் சொந்தத் தாயை கொலைசெய்து காதலுடன் தலைமறைவான இளம்பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


மகள் அமிர்தா மென்பொருள் பொறியாளராக வேலை செய்து வருகிறார். அவரது அம்மா பெயர் நிர்மலா. அமிர்தாவுக்கு ஹரிஷ் என்ற சகோதரரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வங்கியில் வாங்கியிருந்த 15 லட்சம் ரூபாய் வங்கிக் கடனுக்காக அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்துள்ளது.

அதிகாலை சுமார் 4 மணி அளவில் தூக்கத்தில் அலறல் சத்தம் கேட்டு விழித்திருந்த ஹரிஷ் அம்மாவும் மகளும் சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஹரிஷ் அமிர்தாவின் தாக்குதலில் இருந்து தனது தாயாரை காப்பாற்ற முயற்சி செய்தார். அமிர்தா தாக்கியதில் ஹரிசுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. ஹரிஸ் தனது உறவினர்களின் உதவியால் தனது தாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் நிர்மலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் அமிர்தா தனது காதலனுடன் தலைமறைவாகியுள்ளார். சம்பவம் அறிந்த போலீசார் அமிர்தாவை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் அமிர்தா ஒரு பெட்டியுடன் ஒரு இளைஞருடன் பைக்கில் ஏறி செல்வது போன்ற வீடியோ பதிவாகி இருந்தது. அவரது செல்போன்களின் சிக்னல்களை ட்ராக் செய்ததில் அவர்கள் அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து அந்தமான் நிக்கோபார் போலீசார் உதவியுடன் அமிர்தாவும் அவரது காதலனையும் அதிரடியாக கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.