மாமனார், மாமியாரை கவனிக்கவில்லை என்றால் மருமகள், மருமகனுக்கு இனி சிறை! வருகிறது அதிரடி சட்டம்!

மாமனார் மற்றும் மாமியாருக்கு சரியாக பார்த்து கொள்ளாவிடில் மருமக்கள் கைது செய்யப்படுவர் என்ற மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் சென்ற மாதம்  18-ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேசிய குடியுரிமை பாதுகாப்பு சட்ட மசோதா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மசோதா ஆகியவை மக்களவையில் ஒப்புதல் பெறப்பட்டன. 

இதனிடையே மாமியார்கள் மற்றும் மாமனார்களை பார்த்து கொள்ளாத மணமக்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று மசோதா பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் மசோதாவின்படி வயதான பெற்றோர்களை கவனிக்க இயலாத பிள்ளைகள், அவர்களை கவனித்து கொள்வதற்காக அதிகபட்சமாக 10,000 ரூபாய் வழங்கபட வேண்டும்.

தற்போது இது திருத்தப்பட்டு அதிகம் சம்பாதிப்பவர்கள், அதிகளவில் பணத்தை தர வேண்டும் என்று மசோதாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 5,000 ரூபாய் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை அல்லது இரண்டுமே தண்டனையாக அளிக்கப்படும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவானது இன்று மக்களவையில் வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டது.