வேண்டாம் அப்படி செய்யாதே..! அருகில் வந்த மாமனார்..! அவருக்கு மருமகளால் ஏற்பட்ட பகீர் சம்பவம்! என்னாச்சு தெரியுமா?

குடும்பத்தில் நிலவி வந்த பணப்பிரச்சினை காரணமாக மாமனாரை மருமகள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவமானது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் விஸ்ரம்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ராமசேணி என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் குஷ்மா. இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். 2-வது மகனின் மனைவியின் பெயர் காமினி.

ராமசேணி சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய பூர்வீக சொத்துக்களை விற்றார். பெற்றதில் அவருக்கு கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனை தெரிந்துகொண்ட காமினி, அந்த பணத்திலிருந்து தனக்கு 10 லட்சம் ரூபாயை தர வேண்டும் என்று மாமனார் மற்றும் மாமியாரை வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இந்த பணம் தொடர்பாக காமினி தன்னுடைய மாமியாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய போது, காமினி தன்னுடைய மாமியாரை பலமாக தாக்கினார். தன்னுடைய மனைவி வலியால் துடிக்கும் சத்தத்தை கேட்டு ராமசேணி விரைந்து வந்து மருமகளை தடுக்க முயன்றார். 

தன்னுடைய மாமனார் என்றும் பாராமல், காமினி கையிலிருந்த கத்தியை எடுத்து ராமசேணியை குத்தி கொலை செய்துள்ளார். அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த காமினி வீட்டைவிட்டு வெளியேறினார். இவர் ஒரு வழியாக கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் அவரை கண்டுபிடித்தனர்.

அவர்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். ஒரு வழியாக காமினியை கட்டுப்படுத்திய மக்கள் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராமசேணியின் சடலத்தை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

காமினியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது உத்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.