ஏண்டி என்கிட்டயே உன் வேலைய காட்றியா? மாமியாரை துப்பாக்கி முனையில் கடத்திய மாமியார்! அதிர வைக்கும் காரணம்!

துப்பாக்கி முனையில் மாமியாரை கடத்தி மருமகள் சொத்தை எழுதி வாங்க முயன்ற சம்பவமானது படப்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை படப்பையில் அதிமுக பிரமுகர் சுப்பராயன் என்பவர் வசித்து வந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துவிட்டார். இவருடைய மனைவியின் பெயர் பத்மினி. பத்மினிக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலமும், 10 கடைகளும், வீடுகளும் உள்ளன.

பத்மினியின் மூத்த மகனின் பெயர் செந்தில்குமார். இவருடைய மனைவியின் பெயர் மேனகா. இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் செந்தில்குமார் மாயமானார். 18-ஆம் தேதியன்று பத்மினி தன்னுடைய தங்கையின் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மருமகள் மேனகா 5 பேருடன் வந்து பத்மினியை கடத்தி சென்றுள்ளார். 

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அப்பகுதி காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். மேனகாவின் செல்போன் எண்ணை வைத்துக்கொண்டு காவல்துறையினர் அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். அங்கு சென்று மேனகாவை கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் பத்மினியை குறித்து விசாரித்தபோது அவரை பெரும்பாக்கத்தில் உள்ள சகோதரர் வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் காவல்துறையினர் விரைந்து சென்று பத்மினியை மீட்டனர். அப்போது அவரிடம் விசாரித்த போது, மேனகா மற்றும் ஓட்டுநர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் தன்னை கடத்திவந்து சொத்துக்களை எழுதி வைக்குமாறு கூறி மிரட்டினர் என்று கூறியுள்ளார்.

விசாரணையை மேலும் துரிதப்படுத்தியப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது, தன்னுடைய தம்பிக்கு சொத்துக்களை அதிகமாக எழுதி வைத்ததால் செந்தில்குமார், ஓட்டுநர் ராஜேஷ்கண்ணாவை வைத்து சுப்பராயன் கொலை செய்துள்ளார் என்பதும், செந்தில்குமாரின் தம்பியான ராஜ்குமாரையும் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

இந்த இரு கொலைகளுக்கு பின்னர் ராஜேஷ்கண்ணாவுக்கும், மேனகாவுக்கும் நெருக்கம்  ஏற்பட்டது. அப்போது மேனகாவின் தூண்டுதலின் படி ராஜேஷ்கண்ணா செந்தில்குமார் கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் வியூகிக்கின்றனர். தலைமறைவாகியுள்ள ராஜேஷ்கண்ணாவை கண்டுபிடித்தால் மேலும் பல உண்மைகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது படப்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.