என் கணவருடன் உறவுக்கு தடையா இருந்தாங்க..! அதான் காபியில் 5 விஷ மாத்திரை..! அரை லிட்டர் மண்ணெண்ணெய்..! மாமியாரை தீர்த்துக் கட்டிய மருமகள்..!

மாமியாரின் வரதட்சணை கொடுமையை தாங்க இயலாமல் மருமகள் அவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொலை செய்துள்ள சம்பவமானது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வல்லதிராகோட்டை அருகே மணியம்பள்ளம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு ரமேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதீபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 9 மாத குழந்தை ஒன்றுள்ளது. இதனுடைய அடிக்கடி பிரதீபாவுக்கும் அவருடைய மாமியாரான ராஜம்பாளுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தன.

ராஜம்பாள் அதே பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று வேலை முடித்துவிட்டு வீட்டில் ராஜம்பாள் உறங்கி கொண்டிருந்தார். அப்போது பிரதீபா அவருடைய உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். ராஜம்பாள் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டெடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உடலில் 90% காயங்களுடன் ராஜம்பாள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் போராடி வருகிறார். தகவலறிந்த காவல்துறையினர் பிரதீபாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், "நான் டீச்சர் டிரெய்னிங் முடித்துள்ளேன். என்னிடம் வரதட்சணை கேட்டு என் மாமியார் மிகவும் கொடுமைப்படுத்தினார். நாங்கள் ஏற்கனவே திருமணத்தின்போது வரதட்சணை கொடுத்து இருந்தோம். ஆனால் இன்னும் அதிகமாக வேண்டும் என்று என்னை கொடுமைப்படுத்தினார். 

அதுமட்டுமின்றி நானும் என்னுடைய கணவரும் இணைந்து வாழ்வதற்கு என்னுடைய மாமியார் இடைஞ்சலாக இருந்ததால் அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது. 100 நாள் வேலைத்திட்டம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் என்னிடம் அவர் காபி கேட்டார். நான் அவருக்கு கொடுத்த காப்பியில் ஐந்து தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தேன். அதை குடித்த பின்னர் அவர் மயங்கி விட்டார். பின்னர் அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றிவிட்டு வீட்டின் வெளியே கதவை பொட்டு வைத்து எரித்துவிட்டேன்"  என்று வாக்குமூலம் கொடுத்தார்.

வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதீபாவை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.