மாமியாரின் அந்த இடத்தில் கடித்து வைத்த மருமகள்! ஆறு தையல்கள் போடப்பட்ட பரிதாபம்! அதிர வைக்கும் காரணம்!

மருமகள் கடித்து வைத்ததில் மாமியாரின் தலையில் 6 தையல்கள் போடப்பட்டு சம்பவமானது பொள்ளாச்சியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொள்ளாச்சி மாவட்டத்தில் மின் நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு நாகேஸ்வரி என்ற 62 வயது பெண் பத்திர எழுத்தராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மகனின் பெயர் சரவணகுமார். சரவணகுமாரின் வயது 38. இவருடைய மனைவியின் பெயர் கல்பனா. கல்பனாவின் வயது 33. 

இதனிடையே, கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த வண்ணமிருந்தது. இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். தகராறுகள் ஏற்படும் போதும் சரவணகுமார் தன்னுடைய தாயாரின் வீட்டுக்கு சென்றுவிடுவார்.

இதனால் கல்பனா நாகேஷ் வரைக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்தது. ஜனவரி மாதத்தில் கல்பனா தன்னை தாக்கியதாக நாகேஸ்வரி அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே தன் மீதான புகாரை திரும்பப் பெறுமாறு கல்பனா நாகேஸ்வரி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று மின்நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த நாகேஸ்வரியிடம் கல்பனா சண்டை போட்டுள்ளார்.

வாக்குவாதங்கள் முற்றி போனது ஆத்திரமடைந்த கல்பனா தன்னுடைய மாமியாரின் தலையில் ஆழமாக கடித்துள்ளார். வலி தாங்க இயலாமல் அலறிய நாகேஸ்வரி அக்கம்பக்கத்தினர் மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள்  நாகேஸ்வரியின் தலையில் 6 தையல்களை போட்டுள்ளனர்.

மாமியாரை தாக்கிய குற்றத்திற்காக காவல்துறையினர் கல்பனாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது பொள்ளாச்சியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.