மகளை ரயில் முன் தள்ளிவிட்ட தாய்! பிறகு அவர் செய்த விபரீத செயல்! கணவன் ஐஸ்க்ரீம் வாங்கித் தராததால் நிகழ்ந்த கொடூரம்!

ஐஸ்க்ரீம் வாங்கி தராததால் மகளை ரயில் முன் தூக்கி வீசிவிட்டு தாயும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே பரளிஒத்தையூர் என்னும் கிராமமுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருடைய மனைவியின் பெயர் கண்ணகி. கண்ணகியின் வயது 34. இத்தம்பதியினருக்கு அகல்யா என்ற மகள் உள்ளார். இவருடைய வயது 16. 

நேற்று பரளியில் நடந்த திருவிழாவை காண்பதற்கு கண்ணையன் அவருடைய குடும்பத்தினருடன் சென்றார். கண்ணையனிடம் ஐஸ்க்ரீம் வாங்கித்தருமாறு அகல்யா முறையிட்டுள்ளார். ஆனால் பெற்றோர் அகல்யாவுக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தரவில்லை. இதனால் அவர்களுக்குள் பெரும் தகராறு ஏற்பட்டது. திருவிழா முடியும்வரை 3 பேரும் வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தனர்.

திருவிழா முடிந்த உடன் மூவரும் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது ரயில் நிலையத்திற்குள் சென்ற போது, திடீரென்று தாய் கண்ணகி தனது மகள் அகல்யாவை வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் முன் தள்ளிவிட்டுள்ளார். பிறகு கண்ணகியும் அதே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

பலத்த காயங்கள் ஏற்பட்டதால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த காவல்துறையினர் ரயில்வே அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 2 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றி காவல்துறையினர் கண்னையனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.