தந்தை கண் முன்னே மகள் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவமானது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெற்ற தந்தை கண் முன்னே 13 வயது மகளுக்கு நேர்ந்த பயங்கரம்! அதிர வைத்த சம்பவம்!

புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் திவ்யா என்ற பெண் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றிரவு டியூஷன் முடித்தவுடன் தன் தந்தையுடன், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று முதலியார்பேட்டை கடலூர் ரோட்டில் திவ்யா சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அசுர வேகத்தில் மோதியுள்ளது. வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த திவ்யா கீழே விழுந்துள்ளார். பேருந்தின் முன்பக்க டயர்கள் திவ்யாவின் தலை மீது ஏறி சென்றன. தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே, தந்தை கண் முன்னே திவ்யா உயிரிழந்தார்.
அத்துமீறி அதிவேகத்தில் ஓட்டி வந்த தனியார் பேருந்து அப்பகுதி மக்கள் மடக்கி உள்ளனர். பின்னர் ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்த அப்பகுதி காவல்துறையினர் விரைந்து வந்தனர். அவர்களால் கூட்டத்தை கலைக்க இயலாத போது லேசாக தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனால் கடலூர் பிரதான சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தந்தையின் கண்முன்னே மகள் விபத்தில் உயிரிழந்த சம்பவமானது கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.