பிரிந்து சென்ற தந்தை! ஏக்கத்தில் மூளைச்சாவடைந்த மகள்! கல்லறை வாங்கி வைத்து காத்திருக்கும் பரிதாப தந்தை! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

பிரிந்திருந்த தந்தையுடன் ஒன்றாக வாழ நினைத்த மகள் திடீரென்று மூளைச்சாவு அடைந்து உயிருக்கு போராடி வரும் சம்பவமானது தந்தையை பிரிந்த பெண் தற்கொலை அமெரிக்கா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹோண்டுராஸ் நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவர் மேனுவல் கேம்ஸ். இவருக்கு பிறந்த பெண் குழந்தை 2 வயதில் இருந்தபோது இவருடைய மனைவி குழந்தையை விட்டு சென்றுள்ளார். இவருடைய மகளின் பெயர் ஹெய்டி கிரேசியா கேம்ஸ் என்பதாகும்.

தன் குழந்தையை தன்னுடைய பெற்றோரிடம் விட்டு மேனுவல் எந்த ஆவணங்களும் இன்றி அமெரிக்கா நாட்டிற்கு இடம்பெயர்ந்தார். 10 ஆண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு உழைத்தார்.

மேனுவலின் சகோதரி அமெரிக்கா நாட்டில் உள்ள லாங் ஐலேண்ட் என்னும் பகுதியில் 2014-ஆம் ஆண்டில் குடியுரிமை பெற்று இடம் பெயர்ந்தார். இந்நிலையில் 2016-ஆம் ஆண்டில் மேனுவலின் தந்தை ஹோண்டுராஸ் நாட்டில் இறந்து போனதால் மேனுவல் தன் சொந்த நாட்டிற்கு திரும்ப சென்றார்.

பெண் குழந்தையை தனியாக வளர்ப்பது ஹோண்டுராஸ் நாட்டில் சிரமம் என்பதை உணர்ந்த மானுவல் தன் மகளை சகோதரியிடம் 2016-ஆம் ஆண்டில் விட்டு சென்றுள்ளார்.

தாயில்லாத பிள்ளை தன்னுடன் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட மேனுவல் அமெரிக்கா நாட்டிற்கு செல்ல 3 முறை முயற்சித்துள்ளார். மூன்று முறையுமே அவர் தோல்வி தந்தையை காண இயலாததால் ஹெய்டி மிகவும் மனமுடைந்தார். மேலும் தன் அத்தையிடம் தன்னை ஹோண்டுராஸ் நாட்டிற்கே அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். ஹெய்டியின் அத்தை அவரை சிறிது பொறுமையாக இருக்குமாறு கூறியுள்ளார். 

சமீப காலத்தில் மிகவும் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட ஹெய்டி திடீரென்று தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட ஹெய்டியின் அத்தை அவரை மருத்துவமனையில் அனுமதித்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக கூறியுள்ளனர். 

இந்நிலையில் தன் மகளை காண்பதற்கு மேனுவலிற்கு அமெரிக்கா நாடானது அனுமதி அளித்துள்ளது. தன் மகளை மருத்துவமனையில் கண்ட மேனுவல் அதிர்ச்சியில் உறைந்தார். 

தன்னுடன் வாழ நினைத்த மகளுக்காக அதே பகுதியில் ஒரு கல்லறையை மேனுவல் வாங்கியுள்ளார். இந்த சம்பவமானது அமெரிக்கா நாட்டில் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.