சிந்துசமவெளி பட பாணியில் மருமகளை திருமணம் செய்து கொள்வதற்காக, சொந்த மகனையே துண்டு துண்டாக தந்தை ஒருவர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிந்துசமவெளி பட பாணியில் மருமகள் மீது காமவெறி! சொந்த மகனை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற தந்தை!
பஞ்சாப் மாநிலத்தில்தான் இத்தகைய துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தகைய கொடூர சம்பவத்தை நிகழ்த்திய நபரின் பெயர் சோட்டா சிங் (62). இவரது மகன் ரஜ்விந்தர் சிங், மருமகள் ஜாஸ்விர். இவர்கள் 2 பேருக்கும், திருமணமாகி, 12 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், சோட்டா சிங்குக்கு, மருமகளுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விசயம், அவரது மகன் ரஜ்விந்தருக்கு தெரியவந்துள்ளது. இதன்பேரில், சோட்டா சிங்குக்கும், அவரது மகனுக்கும் இடையே அவ்வப்போது சிறு தகராறு ஏற்பட்டுள்ளது. சென்ற செவ்வாய்க்கிழமை இருவருக்கும் இடையே கடும் சண்டை வந்துள்ளது.
இதையடுத்து, மகன் ரஜ்விந்தரை கொன்றுவிட்டு, மருமகளை திருமணம் செய்துகொள்ள, சோட்டா சிங் முடிவு செய்துள்ளார். இதன்பேரில், அன்றிரவே சொந்த மகன் என்றும் பாராமல் கொடூரமாக, ரஜ்விந்தரை கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி, மூட்டை கட்டி வீசியுள்ளார்.
விடியற்காலையில் சோட்டாவின் மைத்துனர் குருசரண் சிங் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். வீடு முழுவதும் ரத்தக்கறை படிந்த நிலையில், குருசரண், சோட்டா சிங்கை மடக்கிப் பிடித்து, போலீசில் ஒப்படைத்துள்ளார்.
காமவெறி தலைக்கேறிய நிலையில், 60 வயது முதியவர் ஒருவர் சொந்த மகனையே வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.