தர்ஷன் இப்படிப்பட்டவனா? அவரது தாயாரே வெளியிட்ட முக்கிய தகவல்! சனம் ஷெட்டி விவகாரத்தில் புதிய திருப்பம்!

பிரபல நடிகை சனம் ஷெட்டி சில தினங்களுக்கு முன்பு தர்ஷன் தன்னுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறி ஏமாற்றி வருகிறார் என போலீசில் புகார் அளித்திருந்தார்.


நடிகை சனம் ஷெட்டி சில தினங்களுக்கு முன்பு இதனைப்பற்றி அடுக்கடுக்கான புகார்களை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். அதுமட்டுமல்லாமல் தர்ஷனுக்கும் தனக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்ற உண்மையை போட்டு உடைத்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்தபிறகு தர்ஷன் தன்னை தவிர்த்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றப் பார்க்கிறார் எனவும் நடிகை சனம் ஷெட்டி கூறியிருந்தார்.

இதற்கு தர்சனும் பத்திரிகையாளர் சந்திப்பில் சனம் ஷெட்டியின் புகார்களுக்கு பதிலடி கொடுத்தார். மேலும் தொடர்ந்து பேசிய தர்ஷன் நடிகை சனம் ஷெட்டிக்கு அவரது எக்ஸ் பாய்பிரெண்ட் உடன் தொடர்பு உள்ளது என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார். இந்த பிரச்சினைகளுக்கு முன்பு நடிகை சனம் ஷெட்டி இலங்கையிலுள்ள தர்ஷன் வீட்டிற்கு சென்று தர்ஷனின் அம்மாவிடம் தங்களுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது . ஆனால் தற்போது தர்ஷன் என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி வருகிறார் என்று அவர்களிடம் முறையிட்டு இருக்கிறார்.

அதற்கு தர்ஷனின் அம்மா எங்களின் குடும்ப நிலை தற்போது சரி இல்லை. இன்னும் வாடகை வீட்டில் தான் இருக்கிறோம். சொந்த வீடு வாங்கவேண்டும். தர்ஷனின் அப்பா இன்னும் சைக்கிளில் தான் சென்று கொண்டிருக்கிறார். தர்ஷனின் தங்கையை செட்டில் பண்ண வேண்டும். இதெல்லாம் முடிந்த பிறகு கொஞ்ச நாள் கழித்து நாம் இதைப் பற்றி பார்த்துக் கொள்ளலாம் எனவும் அவரது அம்மா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.