வெளியேற்றப்பட்ட தர்ஷன்..! கதறித் துடித்த ஷெரீன்! ரகசியமாக எழுதிக் கொடுத்த லெட்டரில் இருந்த ட்விஸ்ட்! பிக்பாஸ் பரபரப்பு!

தர்ஷனுக்கு காதல் கடிதம் எழுதிய ஷெரின், அவருடைய சூட்கேசில்  வைத்த சம்பவமானது பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிக் பாஸ் 3 சீசன் முடிவடையும் நாட்கள் நெருங்கி விட்டன. நேற்று யாரும் எதிர்பாராதவாறு தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது மீட்டிங் உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை அளித்தது.

சில நாட்களுக்கு முன்னர் ஷெரின் தர்ஷனுக்காக ஒரு காதல் கடிதத்தை எழுதி வைத்திருந்தார். பின்னர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, அந்த கடிதத்தை கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டு விட்டார். இதை அறிந்த தர்ஷன் குப்பை தொட்டியிலிருந்த கடிதத்தை வெளியே எடுத்து ஓட்டிப்பார்த்தார்.

நேற்று திடீரென்று தர்ஷன் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தபோது வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தர்ஷனின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் ஷெரினும், தாண்டியும் கதறி அழுதனர். தனியாக சென்ற ஷெரின் அழுதுகொண்டே மீண்டும் ஒரு காதல் கடிதத்தை எழுதி அவருடைய சூட்கேசில் மறைத்து வைத்தார். 

இது ரசிகர்களை பெரிதும் நெகிழ வைத்தது. பின்னர் தர்ஷன் வெளியே வந்தவுடன் அந்த கடிதத்திற்கு பதில் அளிக்குமாறு கமலஹாசன் அவரிடம் கூறினார். அதற்கு தர்ஷன், "இன்னும் 7 நாட்கள்தான் இருக்கிறது. வெளியே வந்தவுடன் என் பதில் கூறுகிறேன்" என்று கூறினார். பின்னர் ரசிகர்களை நோக்கி "இது அந்த பதிலில்லை" என்று கூறினார்.

இந்த சம்பவமானது பிக் பாஸ் வீட்டில் சிறிது நேரம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.