அரசு ஊழியர்களிடம் அடடே மாற்றம்.. எடப்பாடிக்கு ஜே

ஒவ்வொரு தேர்தலிலும் பெரும்பாலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குகள் திமுகவிற்கே போகும். இந்த நிலைமையில் தற்போது குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதாக பலரும் சொல்கிறார்கள். இது உண்மையா? என விசாரித்தோம்.


இதுகுறித்து பேசியவர்கள், ‘‘காலம் காலமாகவே நாங்கள் திமுக ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்து வந்தோம். ஏதோ திமுகதான் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் என தவறாக வழிநடத்தப்பட்டதன் விளைவு.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவரும் அதிமுக அரசில் சம்பள உயர்வு உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் எங்களுக்குக் கிடைத்து வருகின்றன. அதிலும் எடப்பாடியின் இந்த நான்காண்டு ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசு உட்பட பல சலுகைகள் கிடைத்துள்ளன.

கொரோனா சமயத்தில் பல மாநில அரசுகள் சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஆனால் எடப்பாடி அரசு இதை செய்யவில்லை. பணிக்குச் செல்லாவிட்டாலும் முழு சம்பளம் தந்தது. இது எல்லாவற்றையும் விட எங்களுக்கு முழுமையான பணி சுதந்திரம் கிடைத்திருக்கிறது.

திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு சாதாரண விஷயத்திற்கே பல இடங்களிலிருந்து அழுத்தங்கள் வரும். இப்படி பலவற்றை கூட்டிக் கழித்து பார்க்கும்போது எங்கள் பார்வையில் எடப்பாடி உயர்ந்து நிற்கிறார். இதனால் இந்தமுறை எங்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குத்தான்’’ என்று கூறுகிறார்கள்.

எடப்பாடியாருக்கு நல்ல யோகம்தான்.