தெ.ஆப்ரிக்காவுக்கு பேரிடி! உலக கோப்பையில் இருந்து ஸ்டெயின் விலகல்!

தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த முக்கிய முக்கிய வேக பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன், தன்னுடைய தோள் பட்டை காயத்தின் காரணமாக நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை துரதிஷ்ட்ட வசமாக இழந்துள்ளார்.


ஸ்டெய்ன், ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி தொடர்ந்து 5 வது இடத்தில் உள்ளார்.  இத்தகைய சிறப்பிற்குரிய  ஸ்டெய்ன் தன்னுடைய கடுமையான தோள்பட்டை வலியால் சமீபத்தில் நடைப்பெற்ற IPL போட்டியில் இருந்தும் விலகினார்.  இவர் IPL போட்டியில் RCB அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெய்ன், முன்பும் இதேபோல் வலியால் அவதிப்பட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு  இதற்கான அறுவை சிகிச்சையை செய்து கொண்டார். மீண்டும் இதே பிரெச்சனையில் சிக்கி தவிக்கும் இவர்,  நடப்பு  உலக கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலையை அடைந்து உள்ளார் என்பது இவரது ரசிகர்கள் , மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்   

தெண் ஆப்பிரிக்கா அணி, இந்த உலக கோப்பையில் இதுவரை இரண்டு ஆட்டங்களை ஆடியுள்ளது. இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் தெண் ஆப்பிரிக்கா அணி தோல்வியையே தழுவியது.  இவ்விரு ஆட்டங்களிலும் ஸ்டெய்ன் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்டெய்னிற்கு பதிலாக, தெண் ஆப்பிரிக்கா அணியின் மற்றொரு வேக பந்து வீச்சாளரான  பிரான் ஹென்றிக்ஸ் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

இருப்பினும் ஸ்டெய்னின் இழப்பு தெண் ஆப்பிரிக்கா அணிக்கு பேரிடியாக இருக்கும் என கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.