வா நாம சாமிகிட்ட போகலாம்..! 4 வயது மகளுடன் மாடியில் இருந்து குதித்த விபரீத தந்தை! காரணம் தெரியாமல் கதறும் தாய்!

4 வயது மகளை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது மதுரவாயலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரவாயலில் பொன்னியம்மன்மேடு எனுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட பொன்னுசாமி நகரில் திருப்பதி என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 35. அப்பகுதியிலுள்ள பூண்டு குடோணில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவியின் பெயர் சுனிதா. சுனிதாவின் வயது 26. இத்தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு ஆண் மகனும், 4 வயதில் ஹரிகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.  கடந்த 2 வருடங்களாக திருப்பதி மன அழுத்த நோயால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார்.

அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று திருப்பதிக்கு மன அழுத்த நோய் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. செய்வதறியாமல் தவித்து கொண்டிருந்த திருப்பதி தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு மொட்டைமாடிக்கு சென்றுள்ளார்.

பின்னர் மகளுடன் இணைந்து மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்தனர். இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கணவரும் மகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு சுனிதா கதறி அழுதுள்ளார்.

இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஹரிகா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகவும், திருப்பதி உயிருக்கு போராடி கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். 5 வயது மகன் சுனிதாவுடன் இருந்ததால் தப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.