திடீர் மாரடைப்பு! காரை ஓட்டிய நிலையிலேயே தந்தை மரணம்! வேதனையிலும் மகன் செய்த சாதனை!

மே தினத்தை கொண்டாட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த புணிர்த்திற்கு அந்த நாள் துயரமாகவே முடிந்தது. வாகனம் ஓட்டிக்கொண்டு இருக்கும் போதே அவர் இறந்துபோனதைக்கண்ட நிகழ்விலிருந்து புணிர்த்தினால் இன்னும் மீள் இயலவில்லை.


கர்நாடகா மாநிலத்தில் உள்ள துர்காதஹல்லி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு வயது 35. இவருக்கு முனிரத்னம் என்ற மனைவியும், நரசிம்மராஜூ மற்றும் புணிர்த் என்று இரு மகன்களும் உள்ளனர். மே தினத்தன்று குக்கர் ஒன்றை டெலிவரி செய்ய ஹூலியாரு என்ற இடத்திற்கு புறப்பட்டு கொண்டிருந்தார்.

மேலும், அன்று விடுமுறை என்பதால் புணிர்த்தையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். 97 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்றப்போது திடீரென்று சிவக்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தந்தை துடித்து கொண்டிருந்ததை பார்த்த மகனுக்கு என்ன செய்வதன்று தெரியவில்லை. இருப்பினும் தன்னுடைய அறிவாற்றல்லால் வாகனத்தை ஓரம்கட்டினார்.

பின்னர் அவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிவக்குமார் ஒரு கடின உழௌப்பாளி என்றும், அவர் இவ்வளவு சின்ன வயதில் குடும்பத்தை விட்டு சென்றிருக்ககூடாது என்றும் மனம் வருந்தினர். சிவக்குமாரை இழந்த சோகத்தில் அவரின் குடும்பம் மூழ்கியுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.