வந்தாச்சு தி.மு.க.வின் பொய் மூட்டைகள்… அலறும் ஸ்டாலின்.

தற்போது ஆளும் அ.தி.மு.க. அரசு மீது குற்றச்சாட்டு சொல்வதை மட்டுமே ஸ்டாலின் தேர்தல் பிரசாரமாக செய்துவருகிறார். அதற்கெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தக்க பதிலடி கொடுத்துவருகிறார்.


இப்போது தி.மு.க.வினரை அலறச் செய்யும் வகையில் ஒரு மினி புத்தகத்தைப் போட்டு ஸ்டாலினை மிரட்டியுள்ளனர் சிலர். ஆம், தி.மு.க.வின் பொய் மூட்டைகள் என்ற புத்தகம் ஸ்டாலின் சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் பொய் என்று அம்பலப்படுத்துகிறது இந்த புத்தகம். 

எடப்பாடியார் அரசு மீது ஸ்டாலின் என்னவெல்லாம் குற்றச்சாட்டு வைக்கிறாரோ, அதுக்கெல்லாம் தெளிவா விளக்கம் குடுத்து இருக்காங்க. நீட் தேர்வு தொடங்கி, ஜல்லிக்கட்டு, நிதி நிர்வாகம், ஊழல் புகார், எட்டுவழிசாலை போன்ற எல்லா விஷயங்களுக்கும் ;தெளிவா விளக்கம் கொடுத்து இருக்காங்க. 

இந்திய அளவில் எடுக்கப்படும் அத்தனை ஆய்வுகளிலும் தமிழகம் முதல் இடம் பெற்றிருக்கும் நிலையில், ஸ்டாலின் சொல்வது எல்லாமே பொய் என்பதை ஆணித்தரமாக விளக்குகிறது இந்த புத்தகம். 

இது மட்டுமில்லாம, அடுத்தபடியா ஸ்டாலின், கனிமொழி, உதயநிதியின் சொத்து பட்டியல் விபரங்களையும் வெளியிடப் போறாங்களாம். திருட்டு ரயிலில் ஏறி சென்னைக்கு வந்த கருணாநிதி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்துக்கள் வந்தது எப்படின்னு கேள்வி எழுப்பியும் புத்தகம் வரப்போகுதாம்.

தாக்குப்பிடிப்பாரா ஸ்டாலின்.