தி.மு.க.வில் முதல்வர் யோகம் ஸ்டாலினுக்கு இல்லையாம்! வேற யாருக்குத் தெரியுமா?

இந்தத் தேர்தல் ஸ்டாலினுக்கு அக்னிப் பரீட்சை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் கருணாநிதி இல்லாத நிலையில் ஒரு மிகப்பெரிய தேர்தலை சந்திக்கிறார்.


அது மட்டுமின்றி, இப்போது அ.தி.மு.க. கட்சியானது இரண்டாகப் பிரிந்து நிற்கிறது. இதைவிட, தனிப்பெரும் தலைவராக எதிரியாக ஜெயலலிதா இல்லை.

ஆக, மிகவும் எளிதாக அனைத்துத் தொகுதியிலும் தி.மு.க. எளிதில் வெற்றிபெற்று விடும் என்பதுதான் அத்தனை பேரின் எதிர்பார்ப்பும் ஆகும். ஏனென்றால் அ.தி.மு.க. ஓட்டை தினகரன் பிரித்துவிடுவதால், தி.மு.க.வின் வெற்றி மிக எளிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் இப்போதே தி.மு.க.வில் யார் யாருக்கு என்னென்ன பதவி என்றெல்லாம் கணக்குப் போட்டு வருகின்றனர். 

இந்த நேரத்தில்தான் ஸ்டாலின் ஜாதகத்தை கேரளாவில் இருந்து வந்திருக்கும் ஒரு பிரபல ஜோதிடரிடம் தி.மு.க. பிரமுகர் எடுத்துப் போனாராம். ஸ்டாலின் ஜாதகத்தைப் பார்த்த அந்த பிரபல ஜோதிடர், யோகமான ஜாதகம்தான், ஆனா தலைமைக்கு வர முடியாது என்று உதட்டைப் பிதுக்கிவிட்டாராம். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் ஜாதகம் காட்டப்பட, இதுவும் ராஜ யோக ஜாதகம் ஆனால், தலைமைக்கு லாயக்கி இல்லை என்று சொல்லிவிட்டாராம். அதன்பிறகு கனிமொழி ஜாதகம் காட்டப்பட்டதாம். இந்த ஜாதகத்தைச் சேர்ந்தவர் நிச்சயம் முதல்வர் பதவியை அலங்கரிப்பார். யாராலும் தடுக்க முடியாது என்று அந்த ஜோதிடர் சொல்லிவிட்டாராம். 

விஷயம் இப்போது ஸ்டாலினுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சொல்லப்பட, டென்ஷனில் கொதிக்கிறார்களாம்.