ஸ்டாலின் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய நெல்லை கண்ணனை அவர் தற்போது ஆதரித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெண் செய்தி வாசிப்பாளரை ஆடைகள் இல்லாமல் ஓடவிட்டவர் அவர்! நெல்லை கண்ணன் வெளியிட்ட பகீர் தகவல்! இவரையா ஆதரிக்கிறது திமுக?
2016- ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நல கூட்டணி என்ற மும்முனை போட்டி நிலவியது. அப்போது தமிழறிஞரான நெல்லை கண்ணன் மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவந்தார். அப்போது ஒரு மேடையில் அவர் தற்போதைய திமுக தலைவரான ஸ்டாலினை பற்றி மிகவும் அவதூறான கருத்துக்களை பரப்பினார்.
அதாவது, "ஸ்டாலின் பல வருடங்களுக்கு முன்னால் அண்ணாசாலையில் பிரபல பெண் செய்தி வாசிப்பாளரை நிர்வாணமாக ஓடவிட்டார். தற்போது அவர் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசி வருகிறார்" என்று கூறினார். இந்த பேட்டியானது அப்போது பெரிதும் வைரலானது.
சமீபத்தில் நெல்லை கண்ணன் மோடி மற்றும் அமித்ஷாவை அவதூறாக பேசிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கொஞ்சமும் எதிர்பாராத வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
அதாவது, "நெல்லை கண்ணன் இலக்கிய சொற்பொழிவாளர். அவரை கைது செய்வதற்காக தமிழக அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என்று அறிக்கை விட்டுள்ளார். இது பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்மீது நெல்லை கண்ணன் சுமத்திய அவதூறான குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் எவ்வாறு பதில் அளிக்கப் போகிறார் என்று பலதரப்பட்ட மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.