திடீர் பேருந்து பயணம்! சக பயணிகளை திக்குமுக்காட வைத்த ஸ்டாலின்! எங்கு தெரியுமா?.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெறப் போகிற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.


இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்த நிலையில் திமுக தலைவர் மு. க .ஸ்டாலின் அரசு பேருந்தில் ஏறி பிரச்சாரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்திலுள்ள நாங்குநேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி ஆகிய பகுதிகளில் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆகவே இந்த தொகுதிகளில் போட்டியிடும் போட்டியாளர்களுக்கு ஆதரவாக தலைவர்கள் ஒவ்வொருவரும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் தன்னுடைய கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளார். ஸ்டாலின் வாக்கு சேகரிப்பதற்காக பழங்கால முறைகளையும் பின்பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது திண்ணைப் பிரச்சாரம் , நடைபயணமாக மேற்கொண்டு வாக்கு சேகரிப்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் மக்களிடம் அவர்களுடைய கருத்து நேரடியாகப் சென்று சேர்கிறது. விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி சார்ந்த வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார் மு.க.ஸ்டாலின். 

இன்று காலை விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டி என்னும் பகுதியில் உள்ள வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டு திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார் . அவர்களது குறைகளை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயம் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். அதற்குப் பின்பு நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த முகஸ்டாலின் , விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்றில் ஏறி அங்கிருந்த மக்களிடமும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கிருந்த மக்களின் மத்தியில் சற்று புதிதாகவும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஸ்டாலின் மேற்கொண்ட இந்த பேருந்து பிரச்சாரத்தை கண்ட பயணிகள் திக்குமுக்காடி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.