திருவாரூர் இடைத்தேர்தல்! தெறித்து ஓடும் மு.க.ஸ்டாலின்! காரணம் இது தான்!

திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்று கொண்டிருக்கிறார்.


தி.மு.க தலைவர் கலைஞர் மறைவை தொடர்ந்து காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி கடைசியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. கலைஞர் போட்டியிட்டு வென்ற இந்த தொகுதியில் அவரது மகனான மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க பிரமுகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  முதலில் இதை சீரியசாக எடுத்துக் கொள்ளாத ஸ்டாலின், நிர்வாகிகள் சீரியசாகவே வலியுறுத்துவதால் கோபத்தில் இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வரை எந்த இடைத்தேர்தலும் நடைபெறக்கூடாது என்பது தான் ஸ்டாலின் நிலைப்பாடு. அதனால் தான் திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் விவகாரத்தில் தி.மு.க வேட்பாளரை வைத்து வழக்கு தொடுத்து அங்கு தேர்தல் நடைபெறாமல் தடுத்து வருகிறார் ஸ்டாலின்.

   இந்த நிலையில் திருவாரூர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஸ்டாலினுக்கு ஏற்பட்டதோ எரிச்சல் தான். இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும். மேலும் தேர்தல் பணிகளை பொறுத்தவரை தினகரன் தரப்பினர் கில்லி போல் செயல்படுகின்றனர். ஆனால் தி.மு.கவில் தேர்தல் பணிகளில் எக்ஸ்பர்ட் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. இதனால் தான் இடைத்தேர்தலை ஸ்டாலின் விரும்புவதில்லை.

   இந்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தேர்தலை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பது தான் ஸ்டாலின் தரப்பின் முடிவாக உள்ளது. இதற்கு தான் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா மூலம் உச்சநீதிமன்றத்தை தி.மு.க நாடியுள்ளதாக கூறப்படுகிறது. திருவாரூரில் புயல் நிவாரணப்பணிகள் நடைபெறுவதை சுட்டிக்காட்டி இடைத்தேர்தலுக்கு தடை கோரி டி.ராஜா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

   இந்த விவகாரத்தில் தி.மு.க, டி.ராஜா பின்னால் இருப்பதாக தகவல் ஓடுகிறது. அதாவது தேர்தல் நடைபெற்றால் தான் வேட்பாளர் வேண்டும். தேர்தலை இல்லை என்றால் வேட்பாளர் தேவையில்லை, நாமும் போட்டியிட வேண்டியதில்லை என்பது தான் ஸ்டாலின் நிலைப்பாடாக உள்ளது. ஆகவே ஸ்டாலின் திருவாரூரில் போட்டியிட மட்டும் இல்லை திருவாரூரில் வேறு ஒருவரை வேட்பாளராக நிறுத்தவே தயங்குகிறார் என்பது தான் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மூலமாக கசிந்து வரும் தகவல்கள்.