மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்! உள்ளாட்சித் தேர்தலில் சர்வாதிகாரமா? தமிழக அரசை தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்!

நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மேயரை தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அரசியல் கட்சி மற்றும் மக்களிடையே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தமிழக அரசு நேற்று உள்ளாட்சித் தேர்தலில் பரிந்துரைக்கப்படும் கவுன்சிலர்கள் மூலமாக மறைமுகமாக மேயர் தெரிந்திருக்க படுவார் என்று தமிழக அரசு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேயரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த மு க ஸ்டாலின், மறைமுகமாக மேயரை தேர்ந்தெடுப்பது சர்வாதிகார முறையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது போல உள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளார்.