எம்ஜிஆரிடம் திமுகவை அடகு வைத்த கலைஞர்! ஒரே அறிக்கையில் மீட்ட பேராசிரியர்! மறைக்கப்பட்ட வரலாறு!

திராவிட முன்னேற்ற கழகத்தின் 43 ஆண்டுகால பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த இனமான பேராசிரியர் பெருந்தகை வயது மூப்பினால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச்செயலாளராக பேராசிரியர் பெருந்தகை செயல்பட்டு வந்தார். அறிஞர் அண்ணாவின் தம்பியாகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் அண்ணனாகவும் பணியாற்றி கழகத்தின் கட்டிக்காத்த பெருமை அவரையே சாரும். வெள்ளி விழாவில் பேராசிரியர் என்று கலைஞர் வாஞ்சையோடு அழைத்தபோதிலும், தனிப்பட்ட முறையில் அண்ணன் என்றே அவரை அழைத்து வந்தார்.

சென்ற மாதம் 24-ஆம் தேதியன்று வயது மூப்பின் காரணமாக பேராசிரியர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ தீவிர சிகிச்சையில் ஈடுபட்டிருந்தாலும், அவருடைய உடல்நிலையானது சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேராசிரியரின் உடல்நலத்தை பற்றி கேட்டறிவதற்கு பலமுறை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

கழகத்தின் உயிர்மூச்சாய், எழுச்சி நாயகனாய், தன்னம்பிக்கை ஊற்றாய் பேராசிரியர் விலங்கியதற்கு இதோ ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு. 1979ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் தவிர்த்த பிற மாநில கட்சிகளை இணைக்கும் பணியில் அப்போதைய ஒடிசா முதலமைச்சரான பிஜு பட்நாயக் பணி செய்து வந்தார். இவர் முத்தமிழ் அறிஞரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவையும், திமுகவையும் இணைப்பதற்காக பிஜு பட்நாயக் சென்னை வந்திருந்தார்.

எம்ஜிஆர் மற்றும் கலைஞரிடம் தனித்தனியே விவாதித்து தன்னுடைய விருப்பங்களை பிஜு பட்நாயக் அடுக்கி வைத்தார். கட்சியின் சின்னம், கொடி முதலியவற்றைப் பற்றியெல்லாம் முடிவெடுக்க உதவினார். கிட்டத்தட்ட எம்ஜிஆர் மற்றும் கலைஞரின் சந்திப்பானது உறுதிப்பெற்ற நிலையில், சாந்தமாக இருந்த பேராசிரியர் அன்பழகன் கொதித்தெழுந்தார்.

"கருணாநிதி வேண்டுமானால் அதிமுகவிற்கு செல்லட்டும். திமுக அவருடைய சொத்து அல்ல" என்று கூறினார். இதைக்கேட்ட கலைஞர் அதிர்ச்சியுற்று இணைப்பு முயற்சிகளை கைவிட்டார். இந்த நிகழ்வானது அப்போதைய அரசியல் சூழலில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதியன்று கலைஞர் மறைந்தார். இன்று மார்ச் மாதம் 7-ஆம் தேதியன்று தம்பியை காண்பதற்காக அண்ணன் சென்று கொண்டிருக்கிறார்.