துக்ளக் விழாவில் ரஜினி பேசியதற்கு எதிராக பஞ்ச் டயலாக்கில் ட்வீட் போட்ட உதயநிதி ஸ்டாலின்!

முரசொலியை கையிலேந்தி பகுத்தறிவு உடைய சுயமரியாதைக்காரன் திமுக காரன் என்ற அடையாளத்தோடு பொங்கல் வாழ்த்து கூறுவதாக திமுக கட்சி இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.


தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதள பக்கத்தின் மூலம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் திமுக கட்சியின் இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சற்று வித்தியாசமான பொங்கல் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். தற்போது அந்த பொங்கல் வாழ்த்து செய்தியானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நேற்றையதினம் துக்ளக் பத்திரிகையின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் முக்கியமாக இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார் அப்போது பேசிய அவர் பத்திரிகையாளர்களை பற்றியும் பல கருத்துக்களை கூறினார் . 

இன்றைய காலகட்ட பத்திரிகை முன்புபோல் இல்லை என்றும் சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் நம் நாட்டிற்கு தேவை எனவும் அவர் கூறினார் . மேலும் பேசியவர் முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லிவிடலாம்,கையில் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லிவிடலாம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். நடிகர் ரஜினிகாந்த் கூறிய இந்த கருத்தானது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது . மேலும் இதற்கு எதிராக திமுகவினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாகவும்  சற்று கிண்டலடிக்கும் விதமாகவும் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதாவது

முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள் என்று கூறி இருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பதிவானது வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.