நீட் ஆள்மாறாட்டம்! மாணவர்களின் பகீர் வாக்குமூலம்! 2 திமுக எம்பிக்களின் மெடிக்கல் கல்லூரிகளுக்கு குறி! சிபிசிஐடி அதிரடி!

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 2 மாணவர்கள் கொடுத்தள்ள வாக்குமூலத்தால் திமுக எம்பிக்கள் நடத்தி வரும் 2 மருத்துவ கல்லூரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் பயின்று வந்த மாணவர் பிரவீண் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதே போல் குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மெடிக்கல் காலேஜில் படித்து வந்த ராகுல் என்ற மாணவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் எஸ்ஆர்எம் கல்லூரி திமுக எம்பி பாரிவேந்தருக்கு சொந்தமானது.

ஸ்ரீபாலாஜி மெடிக்கல் கல்லூரி திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது. இந்த இரண்டு கல்லூரிகளிலும் நீட் ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்ததை விசாரணையின் போது மாணவர்கள் 2 பேரும் ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும் தரகர் ஒருவர் மூலமாகவே ஆள்மாறாட்டம் செய்ததையும் அவர்கள் போலீசிடம் கூறியுள்ளனர்.

இதனால் அந்த தரகருக்கும் தொடர்புடைய 2 கல்லூரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சிபிசிஐடி போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் விரைவில் எஸ்.ஆர்.எம் மற்றும் ஸ்ரீபாலாஜி மெடிக்கல் கல்லூரிகளில் நேரில் சென்று போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.