கள்ளக்குறிச்சியில் பொன்முடி மகன் 50,000 வாக்குகள் முன்னிலை! தஞ்சையிலும் தெறிக்க விடும் திமுக!

தமிழகத்தில் நடந்த 38 மக்களவை தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவுள்ளன.


கள்ளகுறிச்சி மக்களவை தொகுதியில் திமுக வின் கௌதம சிகாமணி தற்போதய நிலவரப்படி நிலவரப்படி மூன்றாம் சுற்றின் முடிவில் 93817 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக கட்சியின் எல் கே சுதீஷ் 43627 வாக்குகளை பெற்றுள்ளார்.  தினகரன் தலைமையிலான அமமுக கட்சியின் வேட்பாளர் 5749 வாக்குகளை பெற்றுள்ளார். 

தஞ்சை மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் 59800 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார், தமாகா வேட்பாளர்  23322 வாக்குகளையும் பெற்றுள்ளார்.அமமுக வேட்பாளர் 10435 வாக்குகளையும் பெற்றுள்ளார். 

ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி 20843 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் சத்யா 18703 வாக்குகளை பெற்று பின் தங்கியுள்ளார். 

தமிழகத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 38 மக்களவை தொகுதிகளில் 35 இல் திமுக வும், 3ல் அதிமுக வும் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.