தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தை சந்தித்தது நட்பு ரீதியில் மட்டுமே எனவும் இதில் அரசியல் இல்லை எனவும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
கேப்டனை திடீரென சந்தித்த தளபதி! எதுக்கு தெரியுமா?

.தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜய்காந்தை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், தனது நீண்ட நாள் நண்பரான விஜய்காந்த்
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த பின் அவரது உடல் நலம் குறுத்து விசாரிக்கவே இன்று வந்ததாகவும் அவர் பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் வயதில் மூத்தவராக இருந்தாலும் விஜயகாந்த் தன்னை அண்ணன் என அழைத்து மரியாதையுடன் நடத்தியதாக கூறிய அவர், கலைஞர் கருணாநிதி மறைவு செய்தி கேட்டு அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோதும்
தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயகாந்த் ஆறுதல் கூறியதாகவும் அவரது மறைவை தாள முடியாமல் கதறி அழுததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் இது மனிதாபிமானத்துடன் நட்பு ரீதியில் நடைபெற்ற சந்திப்பு எனவும் இதில் அரசியல் கலக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.