திமுக. கூட்டணியில் வேல்முருகன்! ராமதாஸ்க்கு டென்ஷன் ஏற்படுத்தும் ஸ்டாலின்! திருமாவளவன் ஹேப்பி!

வேல்முருகன்


ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி எந்த இடத்திலும் ஜெயித்துவிடக் கூடாது என்பதற்காக வேல்முருகனை வளைக்கிறார் ஸ்டாலின்.

வெற்றிக்கூட்டணி என்பதால் ராமதாஸின் ஒரே சாய்ஸ் தி.மு.க. வாகத்தான் இருக்கும் என்று ஸ்டாலின் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால் நிறைய சீட் மற்றும் நிறைய வாக்குறுதிகள், தேர்தலுக்கு நிறைய நிறைய பணம் என்றதும் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகிவிட்டார் ராமதாஸ்.

அன்புமணிதான் தி.மு.க.வுடன் சீரியஸாகப் பேசிவந்தார். நான் சொல்வதைத்தான் அப்பா கேட்பார் என்று நம்பிக்கையுடன் சப்ரீசனிடம் தெரிவித்துவந்தார். அதை நம்பித்தான் ஸ்டாலினும் இருந்தார். ஆனால், ராமதாஸ்தான் அங்கே முடிவு எடுப்பவர் என்பதும், அன்புமணி டம்மி என்பதும் பின்னால்தான் தெரியவந்தது. அதற்குள் கூட்டணி முடிவடைந்துவிட்டது.

நம்பவைத்து ஏமாற்றிவிட்டார் என்று தி.மு.க. குரூப் இப்போது அன்புமணி மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். எப்படியாவது பா.ம.க. தொகுதிகளை குறிவைத்து தாக்க வேண்டும், அவர்களை முழுமையாகத் தோற்கடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்கிறார்.

அதனால் இப்போது வேல்முருகனை வளைக்கும் முயற்சியில் சபரீசன் இருக்கிறார். இன்றைய நிலையில் வேல்முருகனுக்கு சீட் கொடுப்பது சாத்தியமில்லை என்றாலும், வேறு எந்த வகையில் அவரை கூட்டணிக்குள் இணைப்பது என்று யோசித்துவருகிறார்கள். சீட் கொடுத்தால் பா.ம.க. தொகுதிகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று வேல் முருகன் உறுதி அளித்திருக்கிறார்.

அதேபோல் குரு குடும்பத்தையும் தி.மு.க. கையில் எடுக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் குரு அமைப்பினருக்கு தனியே பிரசார வாகனம் ஏற்பாடு செய்துகொடுத்து, பா.ம.க. தொகுதிகளில் போய் பிரசாரம் செய்யவும் ஏற்பாடுகள் நடக்கிறது. எப்படியாயினும் பா.ம.க.வை தோல்வி அடையச் செய்யவேண்டும் என்பதுதான் ஸ்டாலின் முதல் நோக்கமாக இருக்கிறது.

எது எப்படி இருந்தாலும், இப்போது ஸ்டாலின் முழுமையாக பா.ம.க. எதிர்ப்பு நிலையில் நிற்பதைக் கண்டு திருமாவளவன் ஹேப்பி அண்ணாச்சி.