கம்யூனிஸ்டுகளுக்கு ரூ.25 கோடி! கொங்கு ஈஸ்வரனுக்கு ரூ.15 கோடி! அள்ளிக் கொடுத்த ஸ்டாலின்! சிக்கலில் திமுக!

டெல்லி: மக்களவைத் தேர்தல் செலவுக்காக ரூ.25 கோடியை திமுக கொடுத்ததாக, இடது சாரி கட்சிகள் தெரிவித்துள்ளன.


பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சில மாதங்கள் முன்பாக, மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக வென்று ஆட்சியமைத்த நிலையில், தமிழகத்தில் திமுக பெரும்பாலான மக்களவை தொகுதிகளில் வென்று ஆச்சரியப்பட வைத்தது. திமுக.,வின் வெற்றி பின்னணியில் நிறைய பணம் விளையாடியிருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.  

இதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது தங்களது தேர்தல் செலவுகள் பற்றி திமுக சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி திமுக தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மக்களவை தேர்தலுக்கான மொத்த செலவு ரூ.79.26 கோடி எனக் கூறப்பட்டுள்ளது. இதில், கூட்டணி கட்சிகளுக்கு ரூ.40 கோடி செலவிடப்பட்டதாக, திமுக தெரிவித்துள்ளது.  

இதன்படி, சிபிஐ மற்றும் கொங்கு நாடு ஜனநாயக கட்சிகளுக்கு தலா ரூ.15 கோடியும், சிபிஎம் கட்சிக்கு ரூ.10 கோடியும் தந்ததாக, திமுக குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த மூன்று கட்சிகளுமே ஓரிரு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டன. இந்நிலையில், அவர்களுக்கு ரூ.10 கோடிக்கு மேல் தேர்தல் செலவு நிதி அளித்தது தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறிய செயலாகும், என, விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.