தி.மு.க. போட்டியிடும் தொகுதி பட்டியல் ரெடி! பணம் இருந்தால் சீட்டு - கறார் ஸ்டாலின்!

ஸ்டாலின் கறார்


முதலில் தேர்தல் விவகாரத்தில் இறங்கியது தி.மு.க.தான். அதேபோன்று முதன்முதலாக தேர்தல் கூட்டணி விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததும் தி.மு.க.தான்.

அந்த வகையில் இப்போது திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடப்போகும் தொகுதிகள் எவையாக இருக்கும் என்று சீனியர் தி.மு.க. புள்ளி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கொடுத்த பட்டியல் இது. வழக்கமாக தொகுதிக்கு வேட்பாளரைத் தேர்வு செய்யும்போது, யாருக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது, யாருக்கு தொகுதி செல்வாக்கு உள்ளது, அடங்கியிருப்பாரா என்பன மட்டுமே பரிசீலனை செய்யப்படும்.

ஆனால், இந்த முறை பணம்தான் பிரதானம். யாரிடம் 30 கோடி ரூபாய் செலவழிக்கும் தெம்பு இருக்கிறதோ, அவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவாராம். மேலும், அவர் 30 கோடி ரூபாயை கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்தப் பணத்துடன் கட்சிப் பணம் 10 கோடி ரூபாய் சேர்த்து 40 கோடி ரூபாய் தொகுதிக்கு செலவழிக்கப்படும் என்று ஸ்டாலின் கறாராக சொல்லி இருக்கிறார். அதனால், அந்த அளவுக்கு வசதி இருந்தால் மட்டுமே வேட்பாளர், மற்றவர் எல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் என்றார்.

இதோ, அந்த பட்டியல்...

திமுக :-

1. வடசென்னை

2. தென்சென்னை

3. மத்திய சென்னை

4. வேலூர்

5. சேலம்

6. அரக்கோணம்

7. கிருஷ்ணகிரி

8. தருமபுரி

9. திருவண்ணாமலை

10. கடலூர்

11. பெரம்பலூர்

12. திருச்சி

13. திண்டுக்கல்

14. கரூர்

15. கோவை

16. பொள்ளாட்சி

17. நீலகிரி

18. நெல்லை

19. தூத்துக்குடி

20. தஞ்சாவூர்

காங்கிரஸ் :-

1. கன்னியாகுமரி

2. ஸ்ரீபெரும்புதூர்

3. மயிலாடுதுறை

4. சிவகங்கை

5. தேனி

6. திருவள்ளூர்

7. காஞ்சிபுரம்

8. ஆரணி

9. விருதுநகர்

10. புதுச்சேரி

விசிக :-

1. சிதம்பரம்

2. விழுப்புரம்

மார்க்சிஸ்ட் :-

1. மதுரை

2. திருப்பூர்

இந்திய கம்யூனிஸ்ட் :-

1. நாகப்பட்டினம்

2. தென்காசி

முஸ்லீம் லீக் :-

1. இராமநாதபுரம்

ஐ.ஜே.கே :-

1. கள்ளக்குறிச்சி

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி :-

1. நாமக்கல் 

மதிமுக :-

1. ஈரோடு

எதிர்க் கட்சியில் யார் நிற்கிறார்கள், எந்தத் தொகுதி மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்பதைவைத்து, ஒருசில மாற்றங்கள் மட்டுமே இருக்கும் என்கிறார்.