ஒண்ணுமே புரியலை உலகத்திலே... திணறும் திமுக வேட்பாளர்கள்

பணம் வாங்கிக்கொள்வதில் காட்டும் ஆர்வத்தை தி.மு.க. ஒருபோதும் திருப்பிக் கொடுப்பதில் காட்டுவதே இல்லை. இந்த விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கவே, டென்ஷனில் இருக்கிறார்கள் தி.மு.க.வேட்பாளர்கள்.


இப்போது திமுக வேட்பாளர்களில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே சத்து மாத்திரைகள் போய் சேர்ந்திருக்கிறதாம். அதுவும் ஒரே அளவாக இல்லாமல் ஆளுக்குத் தக்கபடி கொடுக்கப்பட்டிருக்கிறது. யானை பசிக்கு சோளப் பொறியா? என கிடைத்தவர்கள் அங்கலாய்க்க, கிடைக்காதவர்களோ கொதித்துப்போய் இருக்கின்றனர்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சத்து மாத்திரைகள் வராவிட்டால் நிலைமை சிக்கல்தான் என பல வேட்பாளர்களும் தலைமைக்குத் தெரியப்படுத்தி உள்ளனர். ‘’ கையில் உள்ளதையோ, அல்லது லோக்கலில் வாங்கியோ சமாளியுங்கள்.

தேர்தல் முடிந்த பிறகு அமௌண்ட் உங்கள் கைக்கு வந்து சேரும்’’ என்கிற தலைமையின் பதிலை யாரும் நம்பத் தயாராக இல்லை. இது பற்றி கரன்சி இல்லாமல் திணறிக்கொண்டிருக்கும் தென்மாவட்ட திமுக வேட்பாளர் ஒருவர் பேசினார். 

எங்க கட்சியில் எல்லாரும் கே.என் நேரு, எ.வ.வேலு கிடையாது. கைவசம் இருந்ததும் கடந்த பத்து வருடங்களில் கரைந்துபோய் விட்டது. இதுதான் உண்மை நிலவரம். இதை புரிந்துகொள்ளாமல் தலைமை எங்களை செலவழிக்கச் சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது. ஒட்டுக்கு பணம் தருவதை விடுங்கள்.

நியாயமான செலவுகளுக்குக் கூட காசு இல்லாமல் நாங்க படும் பாடு எங்களுக்குத்தான் தெரியும். தலைமை இந்த விஷயத்தில் உடனடியா கவனம் செலுத்தவில்லையென்றால் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாத கதையாகப் போய்விடும்’’ என்கிறார். ஆகவே தி.மு.க. வேட்பாளர்கள் டென்ஷனில் தவிக்கிறார்கள்.