பள்ளித் தோழிகளை சந்தித்த குதூகலத்தில் தமிழச்சி! வைரல் போட்டோ!

என்றைக்கு அழகான வேட்பாளர் என்று மூன்றாம் கலைஞர் என்று சொல்லப்படும் உதயநிதி சொன்னாரே, அன்றுமுதல் தமிழச்சி தங்கப்பாண்டியன் சமூக வலைத்தளங்களில் ஜெகஜோதியாக மின்னிக்கொண்டு இருக்கிறார்.


இவரது வரவால் தமிழிசை செளந்தர்ராஜன் இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார். அந்த அளவுக்கு தமிழச்சியின் படங்களைப் போட்டு மீம்ஸ் கிரியேட் செய்கிறார்கள்.

அந்த வகையில், இப்போது சின்ன வயசு பள்ளித் தோழிகளை சந்தித்த தமிழச்சி தங்கப்பாண்டியன் மிகுந்த சந்தோஷமாக இருப்பது போன்று ஒரு படம் வைரலாக பரவி வருகிறது. பழைய தோழிகளை நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கும்போது எல்லோருக்குமே ஒரு குதூகலம் வரத்தான் செய்யும். அப்படிப்பட்ட பழைய பள்ளித் தோழிகளை சந்தித்து தமிழச்சி சந்தோஷமாக இருந்தார் என்று அந்தப் படம் சொல்கிறது.

ஏனுங்க... உங்களுக்கே நல்லா இருக்குதா.... ஏதோ ஸ்கூல்ல ரெண்டு வருஷம் சீனியர்ன்னு நினைச்சு கட்டிப்பிடிச்சு பேசுனா, இப்படி கலாய்க்கிறீங்களே... ஜெயிச்சு வரட்டும்... அப்புறம் உங்களுக்கு இருக்கு கச்சேரி...