ஸ்டாலினை ஓரம்கட்டி கனிமொழி வீட்டில் சரண்டரான திமுக தொண்டன்! திருமணம் செய்து வைத்து நெகிழ்ச்சி! என்னாச்சு?

திமுக மகளிரணி செயலாளரான கனிமொழியின் உள்ளத்தின் தொந்தரவுகள் திருமணம் செய்துகொண்ட சம்பவமானது அனைவருக்கும் நெகிழ்வை ஏற்படுத்தியது.


திராவிட முன்னேற்ற கழகம் மூத்த முன்னோடிகளும்,  நிர்வாகிகளும் தங்களுடைய இல்ல சுபநிகழ்ச்சிகளை கட்சி தலைமை பரிந்துரைக்கும் தேதியிலே நடத்தும் வழக்கம் கொண்டவர்கள். வசதி இல்லாமல் இருக்கும் தீவிர தொண்டர்கள் சிலர் நேரடியாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் வீட்டிலேயே தன்னுடைய மகனுக்கோ மகளுக்கோ திருமணம் நடத்துவர்.

தலைவர் கலைஞர் காலத்திலிருந்து தொண்டர்களின் சில திருமணங்கள் சிலர் தலைவரின் வீட்டில் நடைபெறுவது வழக்கமானதாகும். அது எப்பொழுதும் கோபாலபுரம் அல்லது ஆழ்வார்பேட்டையில் நடப்பதே வழக்கமாகும். 

ஆனால் நேற்று புதிதாக சிஐடி காலனியில் உள்ள திமுக மகளிர் அணி செயலாளர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி அவர்களின் இல்லத்தில் தொண்டர் ஒருவரின் திருமணம் நடைபெற்றுள்ளது. 

திருமண தம்பதியினருக்கு பட்டு வேட்டி, சட்டை, பட்டுப்புடவை ஆகியவற்றை கனிமொழி வழங்கினார். நல்லெண்ணத்துடன் ஆசிர்வாதம் செய்து அவர்களை வாழ்த்தினார். இந்த சம்பவமானது அக்கட்சி தொண்டர்களுக்கு பெரிதும் புதிதான நிகழ்வாக அமைந்துள்ளது.