தி.மு.க. காளைக்கு கொம்பு உடைஞ்சு போச்சு... போட்டுத் தாக்கிய விந்தியா

ஆளும் கட்சிக்கு ஆதரவாக பல சினிமா பிரபலங்கள் பேசி வருகிறார்கள். அந்த வகையில் இப்போது நடிகை விந்தியா தென் மாவட்டங்களில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.


அந்த வகையில் மதுரையில் அவனியாபுரம், பெத்தானியாபுரம், சோலை அழகுபுரம், ஊமச்சிகுளம் ஆகிய இடங்களில் விந்தியா பேசினார். அப்போது விந்தியா, ‘‘:கொம்பு வைத்த காளைகளை தெம்பு வைத்த காளையர்கள் அடக்கும் இடம் இந்த அவனியாபுரம். அதைப்போல வருகிற சட்டமன்ற தேர்தலில் கொம்பு உடைந்த தி.மு.க. என்கிற காளையை அ.தி.மு.க.வினர் அடக்கும் இடம் இது.

தேர்தல் வந்தவுடன் கெட்டப் போட்டு கிளம்பி விடுவார் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின். தி.மு.க. கூட்டணியில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது. எந்த கட்சியிலாவது அடிமட்ட தொண்டர்கள் முதல்-அமைச்சர் ஆக முடியுமா?

ஆனால் அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டராக இருந்தவர் தற்போது முதல்-அமைச்சராக உள்ளார். ஆனால் தி.மு.க.விலோ மன்னர்கள் காலத்தை போல வாரிசு அரசியல் நடந்து வருகிறது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்தவர் அண்ணா. ஆனால் தற்போதைய தி.மு.க.வில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு செத்துப்போய் விட்டது.

மக்கள் நலமுடன் வாழ தேவையான அனைத்தையும் செய்தவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 எம்.பி.க்களை தேர்ந்தெடுத்தீர்கள். அவர்கள் இந்த 2 வருடங்களில் மக்களை திரும்பி வந்து பார்த்தார்களா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

சபாஷ், சரியான கேள்விகள்.