திமுகல இருந்துகிட்டு எடப்பாடியாரை பாராட்டுறியா? விவசாய அணிச் செயலாளருக்கு ஸ்டாலின் கொடுத்த ஷாக்!

திமுக கட்சியின் விவசாய அணி செயலாளர் பதவியில் இருந்து கே.பி. ராமலிங்கம் நீக்கப்படுவதாக திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.


கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது கே.பி.ராமலிங்கம் தென்னை விவசாயிகள் நல வாரிய தலைவராகவும், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வந்தார். தற்போது இவர் திமுக விவசாய அணி மாநில செயலாளராக செயல்பட்டு வந்தார்.

சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆராய காணொளி மூலம் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் திமுக விவசாய மாநில அணிச் செயலாளர் கேபி ராமலிங்கம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த நேரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்த கூடாது என்று அவர் கூறியிருந்தார்.

இவரின் இந்த கருத்தை கேட்டு கோபம் அடைந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் திமுகவின் மூத்த தலைவர்களான துரைமுருகன் மற்றும் டி ஆர் பாலு ஆகியோரிடம் கலந்து பேசி கேபி ராமலிங்கம் அவர்களை திமுக விவசாய அணி செயலாளர் பதவியிலிருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.