மு.க.ஸ்டாலின் டம்மி தான்..! எ.வ.வேலு தான் திமுகவின் செயல் தலைவர்! வி.பி.துரைசாமி உடைக்கும் பகீர் ரகசியம்!

திமுகவில் திருவண்ணாமலை எவ வேலு தான் செயல்தலைவர் போல செயல்படுவதாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள வி.பி.துரைசாமி பகீர் தகவலை உடைத்துள்ளார்.


திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள வி.பி.துரைசாமி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, திமுக கட்சியில் ஆர்.எஸ்.பாரதிக்கு கிடைக்கும் மரியாதை கூட துணைப் பொதுச் செயலாளரான எனக்கு கிடைப்பதில்லை. பொதுக்குழுவில் தான் என்னை மேடையில் உட்கார வைப்பார்கள்.

ஆனால் திமுகவில் எ.வ.வேலு செயல் தலைவராக உலா வருகிறார். அவர் சொல்வது தான் கட்சியில் நடக்கிறது. எ.வ.வேலு சொல்வதைத்தான் ஸ்டாலின் கேட்கிறார். தேர்தலின் போது மட்டும் என்னை அழைத்து, அருந்ததியினர் மக்களிடம் பிரச்சாரம் செய் துரைசாமி என வேலு உத்தரவு போடுவார்.

பாருங்கள் நான் ஒரு துணைப் பொதுச் செயலாளர் ஆனால் வேலு ஒரு சாதாரண மாவட்டச் செயலாளர் ஆனால் அவர் உத்தரவு போட்டால் நான் கேட்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் கே.என்.நேருவெல்லாம் திமுகவில் எனக்கு ஜூனியர். அவரை கேட்காமல் தலைமை எதுவும் செய்யாது.

இவ்வாறு அந்த பேட்டியில் துரைசாமி கூறியுள்ளார். இதன் மூலம் திமுகவில் எவ வேலு, கே.என்.நேரு மற்றும் ஆர்.எஸ்.பாரதியின் ஆதிக்கம் தான் நடப்பது தெரியவந்துள்ளது.