தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சி. ஏன்னு காரணம் தெரியுமா?

அடுத்து தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும் சொல்லப்பட்டு வரும் நேரத்தில், அந்த கூட்டணியில் இருந்து ஒரு கட்சி வெளியேறி இருப்பது தி.மு.க.வினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதற்கு காரணம் என்று ஐபேக்கை அந்த கட்சி சுட்டிக் காட்டிள்ளது.


ஆம், பாரிவேந்தரின் ஐ.ஜே.கே. கட்சிதான் இப்போது தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறது பாரிவேந்தர் தி.மு.க.வின் எம்.பி.யாக நாடாளுமன்றத்தில் இருந்தாலும், அவரது கட்சி மட்டும் வெறியேறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தி.மு.க.வில் 5 தொகுதிகள் கேட்கப்பட்ட நேரத்தில், ‘ஒரே ஒரு தொகுதி மட்டும்தான் கொடுக்கப்படும் என்று கட் அன்ட் ரைட்டாக கூறப்பட்டதாம். இந்த விவகாரம்தான் அந்த கட்சியை அதிர வைத்துள்ளது. அதனால் தி.மு..க. கூட்டணியில் இருந்து வெளியேறி, நேற்றைய தினம் அமித் ஷாவை சந்தித்ததாக கூறப்படுகிறது.

தேர்தல் பரபரப்பைக் கிளப்பும் வகையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சி வருவது, அந்த கட்சியினரை ஆனந்தப்படுத்தியுள்ளது.