தி.மு.க. கூட்டணியில் அடுத்த பிரச்னை ஆரம்பம்… காங்கிரஸும் கமல்ஹாசனும் பேச்சுவார்த்தை

பீகாரில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த காரணத்தால், வரும் 2021 தேர்தலில் மிகவும் குறைந்த தொகுதிகள் மட்டுமே கொடுப்பதற்கு ஸ்டாலின் யோசனை செய்துவருகிறார். இந்த விஷயம் காங்கிரஸ் கூடாரத்துக்கு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.


 ’’மாவட்டத்திற்கு ஒரு தொகுதி கூட இல்லாவிட்டால் எப்படி? என்கிற கொதிப்பு காங்கிரசார் மத்தியில் ரொம்ப அதிகமாகவே காணப்படுகிறது. ஆனாலும் தி.மு.க. இறங்கிவருவதாக இல்லை. 20 தொகுதிகளுக்கு மேல் இல்லை என்பதை காங்கிரஸ் சாதாரணமாக எடுத்துக்கொள்வதாக இல்லை.

ஆகவே, கமலின் மக்கள் நீதி மய்யம், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பல சிறிய கட்சிகளை இணைத்து புதிய கூட்டணி அமைக்கும் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக கமலுடன் காங்கிரசார் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தைகளில் பாசிட்டிவ்வான ரிசல்ட் கிடைத்திருப்பதாக கதர்ச்சட்டைகள் குஷியை வெளிப்படுத்துகின்றனர். இதே குஷியில் தினகரன் தரப்போடும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.

இந்த விஷயம் தி.மு.க. கூடாரத்தில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.