குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்! சென்னை கொளத்தூரில் வீதி வீதியாக சென்று தொடங்கி வைத்தார்!

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு க ஸ்டாலின் சென்னையில் அவரது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் இன்று தொடங்கி வைத்தார்.


சமீபத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமை சட்டத் திருத்தத்தை பொறுத்தவரை ஒரு இன்ச் கூட பின்வாங்க போவதில்லை என்று திட்டவட்டமாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை அவரின் சொந்த தொகுதியான சென்னையில் உள்ள கொளத்தூரில் என்று தொடங்கி வைத்துள்ளார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் கொளத்தூரில் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து குடியுரிமை சட்டத் திருத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளையும் மக்களிடம் எடுத்துக்கூறி அவர்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறார்.

இதுபோன்ற திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கத்தை மற்ற பகுதிகளிலும் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. என்று தொடங்கிய கையெழுத்து இயக்கம் வருகிற 8ம் தேதி வரை நடைபெறும் என்று திமுக தலைமையில் நடைபெற்ற தோழமை கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.