குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக சேகரித்த கையெழுத்து படிவங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பு..

நம்நாட்டில் இயற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தம் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் இணைந்து நடத்திய கையெழுத்து இயக்கம் சேகரித்த படிவங்கள் குடியரசுத் தலைவருக்கு நேற்றையதினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராகவும், என்.ஆா்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆா். திட்டத்தை நிறுத்த கோரியும் பலரும் வன்முறையிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமல்லாமல் நம் நாட்டின் வட கிழக்கு மாநிலங்களிலும் பல போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன இருப்பினும் இந்த குடியுரிமை சட்ட திருத்தம் இதுவரை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை.

இதனால் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வண்ணம் உள்ளனர். அந்தவகையில் திமுக மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் மத்திய அரசு கொண்டுவந்த இந்த குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடு போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மக்களிடம் நேரடியாக சென்று கையெழுத்து பெற்று வந்தது. அப்படியாக கையெழுத்து பெற்ற படிவங்களை முகஸ்டாலின் நேற்றைய தினம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

 இதில் இதுவரை சுமார் 2.5 கோடி மக்களிடம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இயக்கம் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி துவங்கி பிப்ரவரி எட்டாம் தேதி வரை தமிழகத்தில் நடைபெற்றது. எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் இந்த இயக்கத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக திமுக கட்சியை சேர்ந்த மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.

இவ்வாறாக மக்களிடமிருந்து கையெழுத்து பெற்ற இந்த படிவங்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்பொழுது மக்களிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்து கொண்ட படிவங்களை குடியரசுத் தலைவருக்கு திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார். வடிவங்கள் அனைத்தும் விமானங்கள் மூலம் டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.