பொதுச் செயலாளர், பொருளாளர் பதவி..! ஸ்டாலின் மீது துரைமுருகன் கடுப்பு..! டி.ஆர். பாலு கோபம்..! என்ன நடக்கிறது திமுகவில்?

பொது குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் பொதுச் செயலாளர் பொருளாளர் ஆகிய பதவிகளில் ஒன்றோ அல்லது அனைத்து காலியாகுமானால், அப்படி காலியாகும் நாட்களில் இருந்து 120 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்டப்பட்டு காலியாக இருக்கும் பதவிகளுக்கு முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும் என்ற திருத்தப்பட்ட சட்டம் ஒன்றை சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இதற்கு முன்னால் 60 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்ட பட்டு தேர்தல் நடைபெற வேண்டும் என்று இருந்த சட்டத்தைத் திருத்தி தற்போது நடைபெற்று வரும் ஊரடங்கின் காரணமாக 120 நாட்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.திமுகவைப் பொறுத்தவரை தலைவர், பொதுச் செயலாளர் ,பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. கட்சி எடுக்கும் முடிவுகளில் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகிய இருவரின் ஒப்புதல் கண்டிப்பாக தேவை. இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக நீண்ட காலமாக இருந்து வந்த க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி மறைந்தார். இதனால் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்து வருகிறது.

கட்சி விதிப்படி பொதுச் செயலாளர் பதவி 60 நாட்களுக்கு மேல் காலியாக இருக்கக்கூடாது. அதற்குள் பொதுக்குழுவை கூட்டி காலியாக உள்ள பதவிகளுக்கு முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும். திமுகவில் அடுத்த பொதுச்செயலாளர் துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கட்சியினரால் பேசப்பட்டு வந்தது. இதனால் தான் வகித்து வந்த பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் அவர்கள் ராஜினாமா செய்திருந்தார். இதனால் பொதுச்செயலாளர் பதவியுடன் பொருளாளர் பதவி காலியானது. இதனை அடுத்து திமுக கட்சித் தலைமை மார்ச் 29ம் தேதி திமுக பொதுக்குழு கூடி கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு புதியவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால் தற்போது நிலவி வரும் கொரோனா பிரச்சனைகளால் குறிப்பிட்ட தேதியில் திமுக பொதுக் குழுவைக் கூட்ட முடியாமல் போனதால் தேதி அறிவிக்கப்படாமல் பொதுக்குழு கூடும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாளராக இருந்து வந்த துரைமுருகனிடம் தற்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற பதவியும் திமுகவின் அடிப்படை உறுப்பினர் என்ற பதவியும் மட்டுமே உள்ளது. அதேபோல கட்சியின் முதன்மை செயலாளராக இருந்து வந்த டிஆர் பாலுவிடம் இருந்து அந்த பதவியை பறித்து கே என் நேருவிடம் ஒப்படைத்து விட்டார்கள்.

இதனால் வருத்தத்தில் இருந்த டிஆர் பாலுவுக்கு பொருளாளர் பதவி அளிக்கலாம் என்ற நோக்கத்தில் ஸ்டாலின் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பொருளாளர் பதவிக்கு போட்டிகள் அதிகமாக உள்ளதால் விரைவாக பொதுக்குழுவைக் கூட்டி பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளுக்கு இவர்களை நியமித்து விடலாம் என்ற முடிவில் ஸ்டாலின் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

துரைமுருகன் அவர்களை பொறுத்தவரை அறிஞர் அண்ணா காலத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கலைஞருக்கு மிக நெருக்கமாக இருந்து வந்த துரைமுருகன் அவர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி என்பது அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய தருணமாக கருதப்படுகிறது. ஆனால் தற்போது நிலவி வரும் இந்தப் பிரச்சனையால் நாட்கள் தள்ளிப் போகின்றது என்ற வருத்தத்தில் துரைமுருகன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முந்தைய சட்டம் படி 60 நாட்களில் பொதுக்குழுவைக் கூட்டி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்ததால் தலைவர் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி பொதுக்குழு நடத்தாமலே தேர்தல் அறிவிப்பை மட்டும் வெளியிட்டு பொதுச் செயலாளர் , பொருளாளர் பதவிகளுக்கு இருவரையும் மனு தாக்கல் செய்ய சொல்லி அவர்களே வெற்றி பெற்று விட்டதாக அறிவித்து விடுவார் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

ஆனால் தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவ்வாறு செய்யாமல் தேர்தல் தேதிக்கான கால அவகாசத்தை 60 நாட்கள் இருந்து 120 நாட்களாக மாற்றி அமைத்துள்ளார். அதேபோல முதன்மைச் செயலாளர் பதவி பறிபோன நிலையில் டிஆர் பாலுவும் , காலியாக உள்ள பொருளாளர் பதவிக்கு ஏ.வ வேலு ஆ.ராஜா போன்றவர்கள்  போட்டிப் போட்டால் பொருளாளர் பதவியும் பறி போய் விடுமோ என்ற அச்சத்தில் அவர் உள்ளார். ஆகவே டி ஆர் பாலு மற்றும் துரைமுருகன் ஆகிய இருவரும் பொதுக்குழுவைக் கூட்டி தேர்தல் நடைபெறும் தேதியை 60 நாட்களிலிருந்து 120 நாட்களாக தள்ளிப் போனதால் மிகுந்த வருத்தத்தில் உள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அவசரமாக தேர்தல் நடத்தி பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் இவர்களை தேர்ந்தெடுத்துவிட்டால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் ஸ்டாலின் இவ்வாறு தேர்தல் தேதியை தள்ளி போட்டுள்ளார் என்று கட்சியினரால் கூறப்பட்டு வருகிறது.