குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக 2 கோடிக்கும் மேற்பட்டோர் கையெழுத்து- மு.க.ஸ்டாலின் தகவல்!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக கட்சி சார்பாக தொடங்கப்பட்டுள்ள அமைப்பு இதுவரை இரண்டு கோடி மக்களிடம் கையெழுத்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.


குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக கட்சி சார்பாக இயக்கம் ஒன்று உருவாகி இருக்கிறது. அந்த இயக்கத்தில் உள்ள அனைவரும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் திமுக கட்சி சார்பாக திருவள்ளூரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் இந்த மசோதாவிற்கு எதிராக திமுக சார்பில் இயக்கம் ஒன்று அமைத்திருப்பதாகவும் அந்த இயக்கத்தில் உள்ளவர்கள் சுமார் 2 கோடி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

ஒரு கோடி மக்களிடம் மட்டுமே கையெழுத்து பெற வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கிய இந்த இயக்கம் தற்போது இரண்டு கோடி மக்களிடம் கையெழுத்து பெற்றுள்ளதை பார்க்கும்பொழுது சட்ட திருத்த மசோதாவை பொதுமக்களில் பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை என தெளிவாகத் தெரிவதாக மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியிருக்கிறார். மேலும் நம் நாட்டில் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு எதிராக இந்த மசோதா அமைந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். 

நம்முடைய இந்திய அரசாங்கம் கொண்டுள்ள இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் கருத்து வெளியிட்டிருக்கிறது. நம் நாட்டினுடைய ஒரு சட்டத்தை கீழுமாக விமர்சிக்கும் அளவிற்கு நம் நாட்டில் சட்டங்கள் உள்ளன என்ற கேவலமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் எனவும் மு.க.ஸ்டாலின் ஆதங்கத்துடன் கூறினார் போராட்டங்களும் உண்ணாவிரதமும் நாங்கள் நடத்தி வருகிறோம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.