அசிங்கப்பட்டுச்சே ஐபேக்.. தி.மு.க. பாணியில் வசூல் வேட்டையில் பிரசாந்த் கிஷோர் டீம்.

எந்த விஷயங்களில் எல்லாம் காசு பார்க்க முடியும் என்று பணம் பறிப்பதில் தி.மு.க.வை யாரும் விஞ்சவே முடியாது. அந்த கட்சியில் இணைந்து வேலை செய்வதாலோ என்னவோ, அதே புத்தி ஐ.பேக் டீமுக்கும் வந்துவிட்டது.


ஆம், சமீபத்தில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் தன்னை ஐபேக் டீமை சேர்ந்த முக்கியப் புள்ளி என்று கூறியிருக்கிறார்.

அதன்பிறகு, ‘’நீங்க வர்ற தேர்தல்ல தி.மு.க. சார்பா நிற்க ஆசைப்படுறீங்க. ஆனா, நாங்க எடுத்துள்ள சர்வேயில் உங்க பெயர் நாலாவதாகத்தான் இருக்குது. முதல் மூணு பேரைத்தான் தலைமை கன்சிடர் செய்யும்…’’ என்று சொல்லியிருக்கிறார்

அந்த மூணு பேருக்குள் நான் வரணும்னா என்ன செய்யணும் என்று நேரடியாகவே கேட்டிருக்கிறார் அந்த கொங்கு மண்டல புள்ளி. வேறென்ன பணம்தான் என்று ஒரு பெரும் தொகையைக் கேட்டிருக்கிறார். யோசித்து சொல்கிறேன் என்று போனை கட் செய்திருக்கிறார்.

அதன்பிறகு, இந்த அழைப்பு குறித்து மாவட்டச் செயலாளர் தொடங்கி அத்தனை நிர்வாகிகளுக்கும் தகவல் சொல்லவே, அனைவரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். இப்போது தகவல் தலைமைக்கு வந்துவிட்டது. இப்படி நம் ஆட்களிடமே சீட்டிங் போடுகிறார்களே என்று தி.மு.க. தலைமை அதிர்ந்து கிடக்கிறதாம்.