தி.மு.க. மாநிலங்களவை 3 வேட்பாளர்களில் ஒருவர் தலித்!

தமிழ்நாட்டின் ஆறு இடங்கள் உள்பட நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு காலியாகவுள்ள வரும் 26ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.


அதற்கான வேட்பாளர்களை திமுக தலைமையகம் இன்று அறிவித்தது. தற்போதைய உறுப்பினரும் நீண்ட கால நாடாளுமன்றவாதியுமான திருச்சி சிவா மீண்டும் போட்டியிடுகிறார்.

தி.மு.க.வின் சட்ட ஆலோசனைக் குழுவில் முதன்மையான பங்கு வகிக்கும் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவும் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜும் மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்குப் போட்டியிடுகின்றனர்.

அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். திமுகவும் அதிமுகவுமே சமமான இடங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பில், அதிமுக அணியில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

அதிமுக அணியில் இடம்பிடித்துள்ள தேமுதிக சார்பில் தங்களுக்கு இடம் அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது; அதை அதிமுக தலைமை நிறைவேற்றும் என நம்புவதாக பிரேமலதா பகிரங்கமாகவே கூறியிருந்தது, நினைவிருக்கலாம்.