ஒரே ஒரு வார்த்தை..! தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்திய தயாநிமாறன்..! கண்டுகொள்ளாத ஸ்டாலின்.!

நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா? என்று திமுகவின் எம்பி தயாநிதி மாறன் சமீபத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக அரசின் தலைமைச் செயலரை நேரில் சந்தித்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை கொடுக்க திமுக எம்பிக்கள் சென்றிருந்தனர். இதில் டி ஆர் பாலு, தயாநிதி மாறன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். தலைமைச் செயலாளரை சந்தித்த பிறகு திமுக எம்பிக்கள் டி ஆர் பாலு ,தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தலைமைச்செயலாளர் தங்களை தரக்குறைவாக நடத்தியதாக கூறி பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். அப்போது பேசிய டி ஆர் பாலு மக்கள் அதிகாரம் பெற்ற எங்களை மூன்றாம் தர மக்களைப் போல நினைத்து தலைமைச் செயலாளர் செயல்பட்டார் என கூறினார். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை? எனக் கூறிய அவர் இதற்கு விளக்கம் அளிக்க அருகில் இருந்த தயாநிதி மாறனை அழைத்தார்.

அப்போது பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன் எங்களை மூன்றாம்தர மக்களைப்போல தலைமைச் செயலாளர் நடத்துகிறார். அவர் கூறிய வார்த்தைகளை வாயால் சொல்லக் கூட முடியவில்லை. நாங்கள்‌ தாழ்த்தப்பட்ட மக்களா? என்று விளக்கமளித்து ஆவேசமாக பேசினார் தயாநிதிமாறன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகின்றோம் என்பதை கூட பார்க்காமல் அவர் அருகில் உள்ள தொலைக்காட்சி பெட்டியின் சத்தத்தை கூட அவர் குறைக்கவில்லை. எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தலைமைச் செயலாளர் நடந்துகொண்டார் எனவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை எங்கள் தலைவர் மு க ஸ்டாலின் தற்போது செய்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் பொறாமையின் உச்சத்தில் இருக்கிறார் தலைமைச்செயலாளர் என்பது தெரியவந்துள்ளது. நாங்கள் எடுத்து சென்ற கோரிக்கைகள் அனைத்தும் எங்களுக்கானது அல்ல. தமிழக பொது மக்களுக்கானது! அரசாங்கம் செய்ய வேண்டிய ஏராளமான வேலைகளை நாங்கள் செய்து வருகிறோம். இது போன்ற சிறு உதவிகளையாவது நீங்கள் செய்யுங்கள் என்று அவரிடம் கோரிக்கை வைக்க சென்றோம். ஆனால் தலைமைச் செயலாளர் சண்முகம் எங்களை தரக்குறைவாக நடத்தினார் எனவும் தயாநிதி மாறன் குற்றம் சாட்டினார்.

இந்த பேட்டியில் தயாநிதி மாறன் நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா? என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக தயாநிதிமாறன் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்தி பேசியதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.