தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார்.
தூத்துக்குடியில் கருகியது தாமரை! தமிழிசையை ஓடவிட்ட கனிமொழி!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.இதில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 38 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்கள் வந்தவண்ணம் உள்ளன.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார். இவர் சுமார் 20000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன. பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை அவர்கள் பின்னடைவில் உள்ளார். மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மகள் கனிமொழி முன்னிலையில் உள்ளதால் திமுகவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.