இதயத்துடிப்பு குறைந்தது! கிட்னி செயல் இழப்பு! மூச்சுவிடுவதில் சிரமம்! உயிருக்கு ஆபத்தான நிலையில் திமுக எம்எல்ஏ அன்பழகன்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்லாவரம் ரெலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாகியுள்ளது.


கடந்த 2ந் தேதி ரெலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அத்துடன் மூச்சுவிடுவதிலும் அவர் சிரமப்பட்டு வந்த காரணத்தினால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. அவருக்கு தேவையான ஆக்சிஜனில் சுமார் 80 சதவீதம் வரை செயற்கையாக அளிக்கப்பட்டு வந்தது.

மறுநாள் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அவருக்கு சுமார் 45 சதவீதம்அளவிற்கு மட்டுமே செயற்கையாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று மா லை முதல் அன்பழகன் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக ரெலா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மறுபடியும் அன்பழகனுக்கு செயற்கை சுவாசத்தின் வழியாக அதிகமாக ஆக்சிஜன் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது இதயத்தின் நிலையும் மருத்துவ உதவி அளிக்க வேண்டிய அளவிற்கு மோசமாகியுள்ளது. ரத்த அழுத்தத்திற்கு இதயத்திற்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் அவரது நாட்பட்ட சிறுநீரக பிரச்சனையும் மேலும் மோசம் அடைந்துள்ளது. தற்போதைய சூழலில் அன்பழகன் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக ரெலா மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது,.